17 வயது மகளின் தலையை வெட்டி கொலை செய்த தந்தை – உ.பி.,யில் பயங்கரம்!!

0

தனது 17 வயதுடைய சொந்த மகளின் தலையை வெட்டி எடுத்துள்ளார் அவளின் தந்தை. தற்போது இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம்:

இந்தியாவில் தற்போது கடந்த சில மாதங்களாகவே கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தற்போது இதுபோல் உத்திர பிரதேச மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த மாநிலத்தில் சர்வீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஓர் மகள் இருக்கிறாள். தற்போது சர்வீஷ் குமார் தனது மகளின் தலையை வெட்டி அவளை கொடூரமாக கொன்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது மகள் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளதை அறிந்த சர்வீஷ் குமார் இந்த கொடூர செயலை செய்துள்ளார். மேலும் அவளின் தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரை பார்த்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

சிவகாமியை ஜெயிலுக்கு அனுப்பியதை பற்றி விசாரிக்கும் சந்தியா – சிக்குவாரா அர்ச்சனா??

மேலும் மகளின் உடல் சடலமாக வீட்டில் உள்ளது என்று கூறி தனது தவறை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார் குமார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here