‘பெட்ரோல் நிலையங்களிலுள்ள மோடியின் புகைப்படங்களை அகற்றுங்கள்’ – தேர்தல் ஆணையம் உத்தரவு!!

0

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, பெட்ரோல் நிலையங்களிலுள்ள பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மோடியின் புகைப்படங்கள் அகற்றம்

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திற்குமான சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள, பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்றும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG 4 வது டெஸ்ட் – இந்தியா சுழலில் அசத்தல்!இங்கிலாந்துக்கு 5 விக்கெட் காலி!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியியான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, பொது இடங்களில் உள்ள பிரதமர் மோடியின் பேனர்களை அகற்ற கோரி புகார் அளித்துள்ளது. இந்த புகார் குறித்து இந்த தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் கொண்ட விளம்பர பேனர்கள் அடுத்த 72 மணி நேரத்திற்குள்ளாக அகற்றப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here