தமிழக சட்டமன்ற தேர்தல் – விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு 6 தொகுதி ஒதுக்கீடு!!

0

தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது இதற்காக அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் அனைத்து கட்சிகளிலும் தேர்தல் வேட்பாளர்களை நேர்காணல் செய்தும் தேர்ந்தெடுத்தும் வருகிறார்கள். தற்போது தொகுதி பங்கீடு குறித்து திமுக மற்றும் விடுதலை கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஆலோசனையில் திமுக கட்சி, விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கினர். இதனை ஏற்க மறுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை’ – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

அதன்பின்பு இரு கட்சியினரும் சமாதானம் ஆகினர். பின்பு 6 தொகுதிகள் பங்கீடு ஒப்பந்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதியும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதியையும் ஏற்கனவே பிரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here