கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா – பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைப்பு!!

0

பாகிஸ்தான் தற்போது சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 7 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பிஎஸ்எல் போட்டியை ஒத்திவைத்துள்ளனர்.

பாகிஸ்தான்:

கொரோனா பரவல் தற்போது பகுதிகளிலும் குறைந்து வருவதால் அனைத்து நாட்டிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து பகுதியிலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 34 போட்டிகளை கொண்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்ற 7 பேருக்கு யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கிரிக்கெட் வீரர்கள். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்க பாதுகாப்புடன் நடைபெற்ற போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சி. தற்போது 14 போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

#INDvsENG 4 வது டெஸ்ட் – இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி! சுப்மன் கில் டக் அவுட்!!

மேலும் ஆட்டத்தை தொடர்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் தனது நாட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒத்திவைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here