இந்தியாவில் அறிமுகமாகும் விவோ S9 5g மற்றும் S9e 5g?? சிறப்பம்சங்கள் வெளியீடு!!

0

விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான விவோ S9 5g மற்றும் S9e 5g ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளது.

விவோ:

இந்தியாவில் சில மாதங்களாகவே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது லேட்டஸ்ட் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனால் பயனாளர்கள் எந்த போனை வாங்குவது என்று குழம்பி வருகின்றனர். மேலும் பயனாளர்கள் அதிக விரும்பும் விவோ நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது லேட்டஸ்ட் மாடலை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் தனது S9 5g மற்றும் S9e 5g மாடல் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விவோ S9 5g சிறப்பம்சம்:

இது ஆண்ட்ராய்டு 11 வெர்சனை உடையது. முன்பக்கத்தில் 44 மெகாபிக்ஸல்+8 மெகாபிக்ஸல் என இரண்டு கேமராவை கொண்டது. பின்பக்க கேமராவை பொறுத்தவரை 64+8+2 போன்ற மூன்று கேமராவை கொண்டது. மேலும் இது 4000mAh பேட்டரி தன்மையை உடையது. அதுமட்டுமல்லாமல் 8 கிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இந்திய மதிப்பில் ரூ.33,700 ஆகவும் மற்றும் 12ஜிபி ரேம்+256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி இந்திய மதிப்பில் ரூ.37,100 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் எதிரொலி – ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை!!

விவோ S9e 5g சிறப்பம்சம்:

முன்பக்கத்தில் 32 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டது. பின்பக்க கேமராவை பொறுத்தவரை 64மெகாபிக்ஸல் கேமராவை கொண்டது. மேலும் இது 4100mAh பேட்டரி தன்மையை உடையது. அதுமட்டுமல்லாமல் 8 கிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இந்திய மதிப்பில் ரூ.26,900 ஆகவும் மற்றும் 12ஜிபி ரேம்+256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி இந்திய மதிப்பில் ரூ.30,300 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here