படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் ஃபகத் ஃபாசில் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

மலையாள சினிமா நடிகர் ஃபகத் ஃபாசில், விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். மலையாள படத்தின் சண்டை காட்சியில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஃபகத் ஃபாசில்

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். திரைப்பட தயாரிப்பாளரின் மகனான இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாது சில தமிழ் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ஃபகத் ஃபாசில், ஒரு சினிமா தயாரிப்பாளரும் கூட. இவர் நடித்துள்ள ‘நார்த் 24 காதம்’, ‘காட்ஸ் ஓன் கன்ட்ரி’, ‘பெங்களூர் டேஸ்’, ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘அதிரன்’, ‘ட்ரான்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சைக்கோவாக, போலீசாக, வில்லனாக என அனைத்து வகை கதாப்பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார்.  பெங்களூர் டேஸ் படத்தில் இணைந்து பணியாற்றிய போது நடிகை நஸ்ரியா நசீம் மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசில் இடையே காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பின்னும் நடிகை நஸ்ரியாவுடன் ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார் நடிகர் ஃபகத் ஃபாசில். தமிழில் நடிகர் சிவகார்த்திக்கேயனின் ‘வேலைக்காரன்’ என்ற திரைப்படத்திலும், விஜய் சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் ஃபகத் ஃபாசில்.

கதிர், முல்லையை பார்த்து பொறாமையில் கொதிக்கும் மீனா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

இவரது நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘மலையான்குஞ்சு’. இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது நடிகர் ஃபகத் ஃபாசில் உயரமான இடத்திலிருந்து குதித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டுளள்ளது. மூக்கில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த தகவலினால் நடிகர் ஃபகத் ஃபாசில் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here