பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி – லாரி வாடகை கட்டணம் உயர்வு!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் லாரி வாடகை கட்டணத்தை லாரி உரிமையாளர்கள் சங்கம் அதிகரித்துள்ளது.

லாரி உரிமையாளர் சங்கம்:

இந்தியாவில் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே மத்திய அரசு 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அமல்படுத்தினால் லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். தற்போது இதுகுறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் சென்னை மாதவரத்தில் நேற்று பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி நள்ளிரவு முதல் லாரி வாடகை கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்தனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் டீசல் விலையை குறைத்து டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்றும் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை அழிக்கும் நடவடிக்கையை 20 ஆண்டுகளாக நீடித்து மாற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கம் வரும் 15ம் தேதி அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்போது ஒத்திவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here