Sunday, May 19, 2024

“நிவர்” புயல் வலுப்பெற்று 110 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் – வானிலை இயக்குனர் தகவல்!!

Must Read

“நிவர்” புயல் நாளை வலுப்பெற்று சூறாவளி காற்றாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். புயல் தீவிரமாக வலுப்பெற்று வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“நிவர்” புயல்:

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மஹாபலிபுரம் பகுதியினை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அரசு பாதுகாப்பு பணிகளில் இறங்கியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

புயல் வரும் சமயம் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இப்படியாக இருக்க வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இயக்குனர் தகவல்:

அவர் கூறியதாவது, “சென்னையில் நாளை மற்றும் 25 ஆம் தேதி ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும். நாகை, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழை மிக அதிகமாக பெய்யும். “நிவர்” புயல் கரையினை கடக்கும் போது காற்று 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும்”

பெரு தொழில் நிறுவனங்கள் வங்கிகள் திறக்க அனுமதிக்கலாம் – ஆர்பிஐ.,க்கு பரிந்துரை!!

“வடகடலோர மாவட்டங்களில் கடலில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால் மீனவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு சென்றவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புவது சிறந்தது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -