Friday, May 3, 2024

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் – மூன்றடுக்கு பொது முடக்கம் அமல்!!

Must Read

இங்கிலாந்து நாட்டில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது இங்கிலாந்தில் மூன்றடுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்:

கொரோனா வைரஸ் பரவல் தற்போது சில நாடுகளில் குறைந்து வருகின்றது. இந்தியாவில் கூட அதிகபட்சமாக குறைந்து வருகிறது. ஆனால், இங்கிலாந்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் தற்சமயம் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ்களை விட இது புதிய வித மாறுபாடோடு வளர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் குறித்து இங்கிலாந்தில் ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நோய் தாக்கத்தின் எதிரொலியாக இங்கிலாந்தில் மூன்றடுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 19 வயதிற்கு உட்ப்பட்டவர்களுக்கு இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களிலோ அல்லது தோட்டங்களிலோ சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயலாளர் தகவல்:

இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகராதர துறை செயலாளரான மாட்ஹான்ஹாக் கூறுகையில், “கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் கண்டுகொண்டுள்ளோம். இந்த நோய் வைரஸ் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் தன அதிகமாக பரவி வருகின்றது. இது மோசமான நோய் என்பதற்கான அறிகுறிகளை காட்டவில்லை. கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி முழுமாக இந்த நோய் பரவளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது”

தொடங்கியது கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – பா.ஜ.க பின்னடைவு!!!

 matt hancock - health ministy
matt hancock – health ministy

மேலும் கூறுகையில், “இந்த நோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இந்த புதிய உருமாற்றம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நோய் கிருமி, தற்போது பரவி வரும் கொரோனா வைரஸை விட வேகமாக பரவி வருகின்றது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -