Tuesday, May 14, 2024

தொடங்கியது கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை – பா.ஜ.க பின்னடைவு!!!

Must Read

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் தற்போது பா.ஜ கட்சி பின்னடைவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா உள்ளாட்சி தேர்தல்:

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி மற்றும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ கட்சி வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவில் உள்ளது. கேரளாவில் வரும் டிசம்பர் 31 ம் தேதியோடு பதவி காலம் முடிய உள்ள 1199 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக டிசம்பர் 8, 10, 14, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கேரளா மாநிலத்தில் 2.71 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். இதில் சராசரியாக 77% மக்கள் வாக்களித்து இருந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மொத்தம் உள்ள 1199 பதவிகளில் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி,86 நகராட்சி, 6 மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் 244 இடங்களில் மாநிலம் முழுக்க வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதன்படி மாநிலம் முழுக்க ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள இடதுசாரிகள் கட்சி முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தில் உள்ளது. பா.ஜா.க மூன்றாம் இடத்தில் பின்னடைவில் உள்ளது.

முன்னிலை நிலவரம்:

காலை 11 மணி அளவில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 14 மாவட்ட ஊராட்சிகளில் 10 இடங்களில் இடது சாரிகளும், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 86 நகராட்சிகளில் 36 இடது சாரிகளும் 40 இடங்களில் காங்கிரசும் 3 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் முன்னிலையில் உள்ளன.

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து – புள்ளிப்பட்டியலை வெளியிட்ட ஐசிசி!!

6 மாநகராட்சியில் 4 இடதுசாரிகள் கட்சியும் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. 941 ஊராட்சிகளில் 444 இடங்களில் இடது சாரிகளும் 354 இடங்களில் காங்கிரசும்,32 இடங்களில் பா.ஜ. காவும் முன்னிலை வகிக்கிறது. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 98 இடங்களில் இடது சாரிகளும் 53 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 1 இடத்தில் பாரதியஜனதா கட்சியும் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -