இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து – புள்ளிப்பட்டியலை வெளியிட்ட ஐசிசி!!

0

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த வருடத்திற்கான கடைசி பட்டியலும் இதுவே என்றே கூறப்படுகிறது. இதில் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங் தரவரிசையில் முன்னேறியுள்ளார். அதே போல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிலர் டாப் 10இல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தரவரிசை:

இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அனைவர்க்கும் அமைந்துள்ளது.கொரோன தொற்று காரணமாக அணைத்து துறையும் பாதிக்கப்பட்டது.அதே போல் விளையாட்டு துறையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பொது கொரோனாவின் வேகம் குறைந்துள்ளதால் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது.ஆதலால் தரவரிசை பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பேட்டிங் தரவரிசை:

டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். அதே போல் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒரு இடம் முன்னேறி 886 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் லாபுசாக்னே 827 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் மற்றும் பாபர் அசாம் 797 புள்ளிகளுடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ரஹானே மற்றும் புஜாரா டாப் 10 இல் இடம்பிடித்துள்ளனர்.புஜாரா 766 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா அணியின் துணை கேப்டன் ரஹானே 726 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளார். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை எனினும் இவர்கள் டாப் 10இல் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பௌலிங் தரவரிசை:

டெஸ்ட் போட்டியின் பௌலிங்க்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் இந்திய அணியின் பௌலர்களான பும்ராஹ் மற்றும் அஸ்வின் டாப் 10 இல் இடம் பிடித்துள்ளனர். 779 புள்ளிகளுடன் 8 வது இடத்தில ஜஸ்பீர்ட் பும்ராஹ்வும்,756 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் அஷ்வினும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர் தரவரிசை:

டெஸ்ட் போட்டியின் ஆல் ரவுண்டர்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்ட்ரோக்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 3வது இடத்தையும், ரவிச்சந்திர அஸ்வின் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அணிகளின் தரவரிசை பட்டியல்:

டெஸ்ட் போட்டிக்கான அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா அணி 1 இடம் பின்தங்கி 3 வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி எப்போதும் போல தனது முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. தற்போது நடந்து முடிந்த நியூஸிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் அந்த அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூஸிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் புள்ளிபட்டியலில் சிறிதளவு தான் வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here