Monday, April 29, 2024

மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமையவுள்ள இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை – ஆர்டிஐ ஷாக் ரிப்போர்ட்!!

Must Read

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மாநில அரசு இன்னும் மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் கடன் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்று ஆர்டிஐ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற கேள்வி மக்களிடையே பரவலாக வந்து கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1266 கோடியில் அமைக்க பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினர். இந்நிலையில் அந்த எய்ம்ஸ் மருத்துவமைக்கான கட்டுமானம் இன்னும் ஆரம்பிக்கபடவில்லை. மதுரை நகர் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்கே எய்ம்ஸ்? என்கின்ற போஸ்டர் முழுமையாக ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை ஜப்பானிய பன்னாட்டு முகமை ஜிக்கா நிறுவனம் மூலம் கடன் பெறுவதாக இருந்தது. 2022ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டது. ஆனால் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐ தகவல்:

சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காண கடன் நிதி இன்னும் ஜிக்கா நிறுவனத்திடம் கையெழுத்தாகவில்லை. கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் தான் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கப்படும். மேலும், மாநில அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அதிகாரப்பூர்வ நிலத்தை, மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் ஆர்.டி.ஐ.யின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நேர ஜலதோஷத்தை விரட்டும் “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்” – ஸ்பெஷல் ரெசிபி!!

foundation stone laid on jan 2019
foundation stone laid on jan 2019

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் ஆமை வேகத்தில் போகின்ற நிலையில் மத்திய அரசிடம், மாநில அரசு நிலம் ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மத்திய அரசு கூறியது. ஆனால் இன்னும் அது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், எப்போது கடன் கிடைக்கும்? எப்போது கட்டுமான பணி துவங்கும்? என விரைவில் அறிவிக்க வேண்டும். மேலும், மத்திய – மாநில அரசுகள் வேகமாக எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை நடைமுறை படுத்துமாறு பாண்டியராஜா கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -