Saturday, April 20, 2024

மழை நேர ஜலதோஷத்தை விரட்டும் “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்” – ஸ்பெஷல் ரெசிபி!!

Must Read

எப்போது பார்த்தாலும் சிக்கன், மட்டன் அப்படினு சாப்பிட்டு ரொம்ப போர் அடிக்குதா, அப்டினா இந்த முறை நண்டு வாங்கி சமைச்சு பாருங்க. ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இப்போ மழை சீசன் வேற ஆரம்பமாகி விட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதனால் எல்லாரும் ஜலதோசத்துனால அவதிபட்டுட்டு இருப்பாங்க. அவுங்களுக்கு எல்லாம் இந்த “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்” செஞ்சு குடுத்து பாருங்க. ஜலதோஷம் எல்லாம் ஒரே நாளில் ஓடிடும். ஜலதோஷத்தை மட்டும் இல்லங்க நண்டு பல பிரச்சனைகளுக்கும் மருந்தா இருக்கு.

நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

இரத்தசோகையை நீக்குகிறது, முடக்கு வாதத்தை சரி செய்கிறது, நகம்,முடி, சருமம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்கிறது, எலும்புகளை வலிமையாக்குகிறது, முகப்பருக்களை தடுக்கிறது, நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பின் அளவை குறைகிறது, இரத்த அழுத்தைதை சீராக வைக்கிறது, இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

வறுத்து அரைச்ச நண்டு வறுவல் ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • நண்டு – 1 kg
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • இஞ்சி,பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 4
  • தனியா – 2 டேபிள் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – 1 டீ ஸ்பூன்
  • பட்டை – 1 சிறிய துண்டு
  • கிராம்பு – 3
  • ஏலக்காய் – 2
  • மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் நண்டை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
  • ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து கருகி விடாமல் நன்கு வறுக்க வேண்டும்.
  • இந்த கலவையை ஆற வைத்து தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி அதில், சிறிது சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
  • பச்சை வாடை போன பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.
  • இப்பொழுது இதில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்க வேண்டும்.
  • எண்ணையில் மசாலா நன்கு வேக வேண்டும். இதில் உப்பு மற்றும் நண்டை சேர்த்து மசாலா எல்லாஇடங்களிலும்படும்படி கிளற வேண்டும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விட வேண்டும். பிறகு மூடியை திறந்து தண்ணீர் வற்றும் வரை பிரட்டி விட வேண்டும்.
  • கடைசியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.
சுவையான “வறுத்து அரைச்ச நண்டு வறுவல்” தயார்!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -