சேது முதல் சித்ரா வரை..! 2020 இல் நிகழ்ந்த திரையுலக பிரபலங்களின் மரணம் – மனதை உலுக்கிய பட்டியல்!!

0

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து பல ஆபத்துகளையும், எதிர்பாராத எதிர்பாராத பல உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறோம். இந்நிலையில் 2020 ஐ உலுக்கிய திரையுலக மரணங்கள் பற்றிய பட்டியல் இதோ.

திரையுலகினரின் மரணம்

இந்த வருடம் 2020 ஆரம்பித்த நாளில் இருந்து பல போராட்டங்களை நாம் சந்தித்து வருகிறோம். கொரோனா ஆரம்பித்து லாக்டவுன் வரை பல இக்கட்டான சூழ்நிலையை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் பல திரையுலக பிரபலங்களின் மரணமும், தற்கொலையும் பலரையும் உலுக்கியுள்ளது என்றே சொல்லலாம். ‘சாகுற வயசா இது’ எனும் அளவிற்கு இளம் வயதினரையும் இழந்துள்ளோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vadivel balaji
vadivel balaji

இந்த வருடத்தில் ஆரம்பித்த முதல் இறப்பே மனதை உருக்கும் விதமாக 35 வயதான டாக்டரும் நடிகருமான சேதுராமன் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ‘கண்ணா லட்டு திங்க அசையா??’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

அடுத்ததாக தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்ட பிரபல நடிகர் விசு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் எண்ணற்ற படங்களில் மக்கள் மத்தியில் இப்பொழுதும் நிலைத்து உள்ளது. மார்ச் மாதத்தில் இவரின் உரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!!

மேலும் கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா அவர்களின் மரணம் பலரையும் உலுக்கி எடுத்து. திருமணம் ஆகி இரண்டே வருடத்தில் அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியாக்கியது. அவரது மனைவி மேக்னா 4 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். சிரஞ்சீவி ஷார்ஜா நடிகர் அர்ஜுனின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் இந்த எதிர்பாராத மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை தான் ஏற்படுத்தியது.

விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஃபுளோரன்ட் பெரைரா. இவர் வேலையில்லா பட்டதாரி, கயல் போன்ற படங்களில் நடித்தது மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் கலைஞர் டிவியில் மூத்த ஊடகவியலாளராகவும் பணி புரிந்தவர். இந்நிலையில் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரையுலகை உலுக்கிய மற்றொரு மரணம் இயக்குனரான கே.ஆர்.சச்சிதானந்தம் உயிரிழந்தது ஆகும். தயாரிப்பாளர், கதையாசிரியர் என பல திறமைகளை கையில் வைத்திருந்த கே.ஆர்.சச்சிதானந்ததிற்கு 38 வயதே ஆன நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலுங்கு திரையுலகில் பிரபல காமெடி வில்லனாக கலக்கி வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. தமிழிலும் பல படங்களில் வில்லனாக நடித்திருப்பார். உத்தம புத்திரன், ஆறு போன்ற படங்களில் அடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவரும் மாரடைப்பால் காலமானார். இதுவும் பலரையும் அதிர்ச்சியாக்கியது.

மேலும் கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தவசி. அதன் பிறகு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தவசி. திடீரென ஏற்பட்ட புற்றுநோயால் உடல் மெலிந்து தனக்கு உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டார். அதன் பிறகு உயிரிழந்தார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல திரையுலகின் மிகப்பெரிய இழப்பு என்றால் அது எஸ்.பி.பியின் மரணம் தான். இது பலரையும் வேதனையாக்கியது. பலரின் சோகத்திலும், மனஅழுத்திற்கும் தீர்வாக இருந்த எஸ்.பி.பியின் மரணம் பெரும் தாக்கத்தை தான் ஏற்படுத்தியது. இவர் கொரோனா தொற்று காரணமாக பல நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் எந்த பலனும் இன்றி உயிரிழந்தார்.


காமெடியில் நாயகன் பலரையும் சிரிக்க வைத்து பல உள்ளங்களில் குடிபுகுந்தவர் வடிவேல் பாலாஜி. விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் கலக்கி வந்தவரும் கூட. இவரின் இந்த அகால மரணம் பலரையும் தாக்கியது. திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வடிவேல் பாலாஜி.

அடுத்ததாக தற்போது பலரையும் உலுக்கி வருவது சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தான். தப்பான ஒருவரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்து ஏற்பட்ட மனஉளைச்சலால் தூக்கிட்டு கொண்டார் சித்ரா. அடுத்தடுத்து நடைபெற்ற தீவிர விசாரணையால் உண்மைகள் அனைத்தும் வெளியாகின. இப்படி இந்த வருடம் 2020 இல் பல இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here