எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.டெக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், 49.9 சதவீதம் மாணவர்களை மட்டுமே அனுமதிக்க நிர்பந்தித்ததால் இந்த இரண்டு படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக்கான் – கொண்டாடும் தமிழக வீரர்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்துக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டாலும், மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள, ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்பியூடேஷனல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு மத்திய அரசின் 49.9 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here