கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் – மூன்றாவது இடத்தை பிடித்த இந்தியா!!

0

தற்போது அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தற்போது எந்த நாடு அதிகமாக தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

உலக நாடுகள் அனைத்திலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை துன்புறுத்தி வருகிறது. தற்போது தான் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் அனைத்து உலக நாடுகளிலும் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி இந்தியாவில் நேற்று வரை சுமார் 94 லட்சத்தி 22 ஆயிரத்து 22 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 61,96,641 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸும் மற்றும் 3,69,167 சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி – துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை!!

அதேபோல் 28,56,420 முன்கள பணியாளர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி மொத்தம் 58.20 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 7 மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதில் அதிகமாக கர்நாடக மாநிலத்தில் 14.74 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக தடுப்பூசிகளை வழங்கிய நாட்டின் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடத்தில் முறையே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here