ஸ்டாலினை அரசியல்வாதியா பார்த்து இருப்பீங்க, ஹீரோவா பாத்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின்

கலைக்குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் அரசியலில் களமிறங்கும் முன்னதாக தன்னுடைய 33 வயதில் சினிமாவில் கதாநாயகனாக நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தன் அப்பாவை போலவே சினிமா துறையில் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இன்று அனைவராலும் அறியப்படும் மக்கள் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தவிர சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். மு.க.ஸ்டாலின் தன் தந்தையைப்போல அரசியலில் ஈடுபடும் முன்னதாக 1988ஆம் வெளியான ‘ரத்த சரித்திரம்’, ‘மக்கள் ஆணையிட்டால்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது ‘குறிஞ்சி மலர்’ மற்றும் ‘சூர்யா’ உள்ளிட்ட சில திரைத்தொடர்களிலும் நடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

#INDvsENG ஒரு நாள் போட்டி – சதத்தை தவறவிட்ட தவான்!இந்தியா 197/4!!

திரைத்துறைக்கு மிகப்பெரும் பங்காற்றிய மு.க.ஸ்டாலின் 1984 ஆம் ஆண்டு மக்களுக்காக பங்காற்றும்படி அரசியலில் நுழைந்தார். திரைப்படங்களில் நடித்துள்ள மு.க.ஸ்டாலினின் யாரும் கண்டிராத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் போலவே அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here