‘ஜெயலலிதாவை விட இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் அதிக ஊழல் நடந்துள்ளது’ – ஸ்டாலின் பளிச் பேட்டி!!

0

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக மற்றும் திமுக கட்சியினர் மாரி மாரி இருவரும் அவர்கள் செய்யும் குற்றத்தினை கூறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக மற்றும் அதிமுக:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமாமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போட்டியிடப்படும் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலும் உறுதியானது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி மாத்தி மாத்தி குறை கூறி வருகின்றனர். இவர்கள் ஆட்சி செய்யும் பொழுதும் குறை கூறுகிறார்கள். பிரச்சாரத்தின் பொழுதும் குறை கூறுகின்றனர். மேலும் இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

#INDvsENG ஒரு நாள் போட்டி – இங்கிலாந்துக்கு 318 ரன்கள் இலக்கு!!

அதிமுக முதல்வர் வேட்பாளர் நேற்றைய பிரச்சாரத்தில் திமுக கட்சியினர் நிதிக்கு ஆசைப்படுகிற குடும்பம். அதன் காரணமாக தான் அவர்கள் பெயர் அனைத்தும் நிதி என்று முடிகிறது. மேலும் திமுக வாரிசு அரசியலை உருவாக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று கடுமையாக சாடினார். தற்போது தன் பங்கிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் அதிமுகவை சீண்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜெயலலிதா ஆட்சி காலத்தை விட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் ஊழல் அதிகம் என்று கடுமையாக சாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here