முகப்பரு பிரச்சனையா?? இதோ அதற்கான முழு தீர்வு!!

0

இன்றைய தலைமுறை பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை என்றால் அது, பிம்பிள் என்று கூறப்படும் பரு பிரச்சனை தான். இது எப்படி ஏற்படுகிறது என்று கூட சிலருக்கு தெரியாது. இதனை அடுத்து அதில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

பரு பிரச்னை

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் தங்களது உடல் நலனையோ அல்லது முக அழகு நலனையோ கவனத்தில் கொள்வதில்லை. குறிப்பாக, மக்கள் யாரும் தங்களது முக அழகினை கூட பரம்பரிப்பதில்லை. இதனால் அனைவருக்கும் பரு போன்ற தொல்லைகள் அதிகமாக இருக்கும். இதனை எப்படி தவிர்க்க என்று பலருக்கும் தெரியாது.

‘விஸ்வாசம்’ மியூசிக்கில் அப்படி என்ன தான் இருக்கு – இமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

இதற்கு பல ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி மீதி இருக்கும் அழகினையும் கெடுத்து கொள்கின்றனர். பரு பிரச்சனையை போக்க ரசாயனம் கலந்த எந்த பொருளும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி பேக் செய்து பருக்கள் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • தேன் – 2 டீஸ்பூன்
  • லவங்க பட்டை பொடி – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – டீஸ்பூன்

இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்கவும். பின்பு, அதனை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் பருக்கள் மறைந்து விடும். ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். இப்படி செய்தால் பருக்கள் பிரச்சனையில் இருந்து தப்பித்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here