Monday, April 29, 2024

மறைந்த நடிகை சித்ராவின் முதல் திரைப்படம் – அடுத்த மாதம் ரிலீஸ்??

Must Read

மறைந்த நடிகை சித்ரா நடித்துள்ள “கால்ஸ்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவரும் என்று அந்த படத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் நடிகை சித்ரா நடித்த முதல் மற்றும் கடைசி படமாக மாறியதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நடிகை சித்ரா மரணம்:

சின்ன திரையில் பல சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான், நடிகை சித்ரா. அவர் முதன் முதலாக தொகுப்பாளினியாக தான் இருந்து வந்தார். அதற்கு பின் பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற நாடகத்தில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவே அவர் புகழ் அடைய காரணமாக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது வாழ்வின் லட்சியமே திரைப்படங்களில் நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்பதே. இவர் சீரியலில் நடிப்பதற்காக ஒரு ஹோட்டலில் தனது கணவர் ஹேம்நாத் உடன் தங்கியுள்ளார். மனஅழுத்தம் காரணமாக அவர் ஹோட்டல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடைசி படம்:

இப்படியான நிலையில், அவர் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்த “கால்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ரிலீஸ் ஆகி அவரது ரசிகர்களை கவலை அடைய வைத்தது. அவரது முதல் படமே கடைசி படமாக மாறியதால் அனைவரும் வருத்தம் அடைந்தனர்.

சிறுவர்களாக மாறும் சிறுமிகள் – உலகின் புரியாத புதிராக உள்ள டொமினிக்கன்!!

இந்த படத்தினை சபரீஷ் என்பவர் இயக்கியுள்ளார். ஜெயக்குமார் மற்றும் காவேரிசெல்வி தயாரித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூலை மாதமே வெளிவர இருந்தது. ஆனால், கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து இந்த படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -