Tuesday, May 14, 2024

தேனிலவுக்கு செல்ல இருக்கும் காஜல் – கிச்சுலு ஜோடி!!

Must Read

தமிழ் திரையின் பிரபலமான நடிகையான காஜல் அகர்வாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது. சந்தோசமாக தனது மணவாழ்வினை ஆரம்பித்த காஜல் தனது கணவருடன் தேனிலவுக்கு செல்ல உள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்:

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை தான் காஜல் அகர்வால். அவர் தமிழில் முதன்முதலாக “பழனி” என்ற படத்தில் தான் நடித்தார்.ஆனால், அந்த படம் அவ்வளவாக அவருக்கு கை கொடுக்கவில்லை. பின், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீக்காத இடம் பிடித்தார். தெலுங்கில் வெளியான “மாவீரன்” படம் தான் அவரை உலகிற்கு காட்டியது.

kajal agarwal

அதன் பின், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றார். அதன் பின் அவரது படங்களுக்கு அவ்வளவாக மவுஸ் இல்லாமல் திருமணம் செய்யலாம் என்று முடிவு எடுத்து யாரும் எதிர்பாரா வண்ணம் தனது திருமணம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

36 வயதாகும் காஜல் அகர்வால் கடந்த மாதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையாக அவரது திருமணம் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்றது. புதிதாக திருமணம் முடிந்தவர்கள் தேனிலவுக்கு போவது வழக்கம், அப்படி காஜல் மற்றும் கிச்சுலு ஜோடி தேனிலவுக்கு செல்ல உள்ளனர்.

தேனிலவுக்கு எங்கு செல்ல செல்ல உள்ளனர் என்பதை காஜல் ரகசியமாக வைத்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் விரைவாக தேனிலாவிற்கு செல்வது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -