முடி கொட்டுதல் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா?? இதோ எளிய தீர்வு!!

0

இன்றைய காலங்களில் நமக்கு முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை போன்ற ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். என்னதான் புது புது ஷாம்புக்களை பயன்படுத்தினாலும் பயனில்லை. அதனால், இரும்பு சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

முடி உதிர்வுக்கு எளிய தீர்வு:

சின்ன வெங்காயம் தோலை உரித்துவிட்டு மிக்சி அல்லது உரலில் போட்டு அரைத்து அதன் சாறை மட்டும் புழிந்து எடுக்க வேண்டும். பின் நன்றாக தலையின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 45 நிமிடம் கழித்து சீகைக்காய் அல்லது அதிக இரசாயனம் கலக்காத ஷாம்பூ கொண்டு தலையை அலச வேண்டும். முடி உதிர்வு நின்று நன்றாக வளரும். முடி ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் பட்டு போல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கேரளா பெண்களுக்கு பொதுவாக முடி மற்றும் முகம் பளபளப்பாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் அன்றாட வாழ்வில் தேங்காய் அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். தேங்காயில் எண்ணற்ற நண்மைகள் இருக்கின்றன. தேங்காயை நன்றாக அரைத்து அதன் பாலை எடுத்து தினமும் முடிகளில் தேய்த்து அலசினாலே போதும் கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

கருவேப்பிலை நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது. கருவேப்பிலை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தேவையான அளவு தயிர் சேர்த்தது அரைத்து தலைக்கு தேய்தால் முடி உதிர்வது நின்று கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.

நம் தலை அரிப்பதற்கு காரணம் முடியின் வேர்கால்களில் உள்ள செல்கள் இறந்து போவதுதான். இதற்கு கற்றாழை ஜெல் மற்றும் சர்க்கரையை கலந்து நன்றாக முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும். கற்றாழையில் புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி முடி வேர்கால்களுக்கு போஷாக்கு அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here