இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை பின்தொடரும் ஜஸ்டின் பைபர் – ஹாலிவுட்டில் தமிழன்!!

0

சினிமா துறையில் தென் இந்தியர்களின் பங்கு ஈடுசெய்ய முடியாதது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் இசையமைப்பில் மெகா ஹிட் அடித்த ‘கொலவெறி’ பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. பாடகர்-இசையமைப்பாளர்-நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஜிவிபி வெளியிட்ட இன்டர்நேஷனல் பாடல் ஒன்று ஹிட் அடித்த நிலையில் அது பிரபல ஆங்கில பாடகர் ஜஸ்டின் பைபரையும் கவர்ந்து விட்டது போல தெரிகிறது. இதனால் ஜிவிபி-யை ஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்தொடர்ந்து உள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார்:

ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களின் வழிவந்தவர் தான் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆக தமிழ் சினிமாவில் நுழைந்த இவருக்கு முதல் படமே பெயர் வாங்கிக் கொடுத்தது. அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவிபி, சமீபத்தில் வெளியான தனுஷின் அசுரன் படத்திலும் மியூசிக், பாடல்கள் என புகுந்து விளையாடி இருப்பார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ரசிகர்களை எதிர்பார்த்த அளவு கவராத போதிலும் இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு உள்ளார். கோலிவுட்டில் கொடி நாட்டிய ஜிவிபி தற்போது ஹாலிவுட் பக்கம் திரும்பி உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் ரிக்கி புர்ச்சலின் திரைப்படமான ‘ட்ராப் சிட்டி மூலம்’ ஹாலிவுட்டில் நடிகரமாக அறிமுகமாக உள்ளார். இப்படம் ஒரு போதைப்பொருள் விற்பனையாளரைப் பற்றிய இப்படத்தில் ஜிவிபி ராப் சிங்கர் ஆக நடிக்க உள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் டாக்டராக நடிக்கிறார். சமீபத்தில் தனது முதல் இன்டர்நேஷனல் ஆல்பம் ‘ஹை அண்ட் டிரை’ யை வெளியிட்டார். இந்த பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

யாஷிகா உடன் டேட்டிங் சென்ற நபர் – ஒருவேளை இவரா இருக்குமோ?? கலக்கத்தில் காமெடி நடிகர்!!

இந்த பாடல் அவருக்கு சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஜூலியா கார்த்தாவுடன் ஒரு பாடலிலும் சேர்ந்துயுள்ளார். தற்போது பாப் நட்சத்திரமான ஜஸ்டின் பீபரை ஜிவிபி-இன் பாடல்கள் கவர்ந்து விட்டது போல தெரிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ட்விட்டரில் ஜிவி பிரகாஷ் குமாரை, ஜஸ்டின் பைபர் பின்தொடர்கிறார். அவர் தமிழ் திரையுலகில் பின்தொடரும் ஒரே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here