
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் அடுத்தடுத்து ஷோ எல்லாம் ஹவுஸ் புல்லாக தான் இருந்து வருகிறது. எப்போதும் போல் பல படங்களை காப்பி அடித்து தான் இந்த படத்தையும் எடுத்துள்ளார் என்று படத்தை பார்த்த பலரும் விமர்சனம் செய்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகளவில் 100 கோடியை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடியை எட்டியுள்ளது.