தமிழகத்தில் மாயமாகும் ரேஷன் பொருட்கள்…, கடுமையான விதிகளை அறிவித்த நுகர்வோர் துறை!!

0
தமிழகத்தில் மாயமாகும் ரேஷன் பொருட்கள்..., கடுமையான விதிகளை அறிவித்த நுகர்வோர் துறை!!
தமிழகத்தில் மாயமாகும் ரேஷன் பொருட்கள்..., கடுமையான விதிகளை அறிவித்த நுகர்வோர் துறை!!

ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலைக்கு அரசு வழங்கி வருகிறது. இவ்வாறு, தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை சிலர் முறைகேடாக பயன்படுத்தி கள்ளச் சந்தையில் விற்பதாக புகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனை உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தீவிரமாக விசாரித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.49,40,516 லட்சம் மதிப்பிலான 3610 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி, 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம் பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கடந்தப்பட்டதாக கண்டறிந்து அதனை கைப்பற்றியும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகைய கடத்தலில் ஈடுபட்டவர்களின் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட கூடும் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு VIP களே., உங்களுக்காகவே வங்கி கடனுதவி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here