
கோலிவுட் திரையில் ”தமிழ் படம் 2” வில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ் சின்னத்திரையில் தனது கெரியரை தொடங்கிய இவர் தற்போது தென்னிந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆரம்பத்தில் இவர் படங்களில் தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். அதன் பிறகு தான் தனது திறமையால் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தனது மரணத்தை அன்றே கணித்த “எதிர் நீச்சல்” மாரிமுத்து.., ஷாக்கில் ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!
இப்படி பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மட்டுமல்லாது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு இவர் ஷேர் செய்யும் பதிவுகளை பார்ப்பதற்காகவே 3 மில்லியன் பாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கூட இவர் தனது நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு லைக்குகளை குவித்துள்ளார்.