காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஜடேஜா காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். தற்போது தான் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜடேஜா:

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டராக திகள்பவர் தான் ஜடேஜா. இவர் இந்திய அணியின் ஓர் முக்கிய வீரராக திகழ்கிறார். மேலும் இந்திய அணிக்காக பல முறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிகாட்டியுள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு விரலில் ஏற்பட்ட காயத்தினால் இவர் அந்த தொடரில் இருந்து விலகினார். பின்பு இவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்பு இவர் காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது அவர் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடியோவை பதிவிட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – 7வது இடத்திற்கு முன்னேறிய ரிஷாப் பாண்ட்!!

அதில் இரண்டு மாதங்களுக்கு பின்பு பேட் மற்றும் பந்தை தொடுவதில் மகிழ்ச்சி என்று கேப்ஷன் இட்டுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இவர் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளார். காயத்தில் இருந்து பயிற்சிக்கு ஜடேஜா திரும்பியதால் சிஎஸ்கே ரசிகர்கள் படு குஷி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here