தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் – தேர்தல் அதிகாரி தகவல்!!

0

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே, வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

வாக்காளர் தகவல் சீட்டு

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடியில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான்கார்ட் தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் உள்ள அடையாள அட்டை, தொழிலாளர் நலத்துறையின் காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் உள்ள ஓய்வூதிய ஆவணம், அவை உறுப்பினர்களுக்குள்ள அலுவலர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்கலாம் என வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைக்கு பதிலாக, வாக்காளர்களின் பெயருடன் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி மையம், வாக்காளர் வரிசை எண், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டு தேர்தல் நடைபெறும் ஐந்து நாட்களுக்கு முன்னாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும்.

‘குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள மாட்டேன்’ – மணிமேகலை அதிர்ச்சி தகவல்!!

வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் 11 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணம் இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவு செய்ய முடியும். வாக்காளருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவர் தனது வாக்குகளை பதிவு செய்வதற்கு தகுதியுடையவர் ஆவர் என தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here