‘குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள மாட்டேன்’ – மணிமேகலை அதிர்ச்சி தகவல்!!

0
நீண்ட காலமாக மணிமேகலையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த அவரது மொத்த குடும்பம் இதுதானா??
நீண்ட காலமாக மணிமேகலையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த அவரது மொத்த குடும்பம் இதுதானா??

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி மணிமேகலை

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு வருகிறார். மணிமேகலை விஜய் டிவிக்குள் நுழையும் முன்னதாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவியின் ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தார் மணிமேகலை. அந்நிகழ்ச்சிக்கு பிறகு ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மணிமேகலை. தனது அடாவடியான பேச்சாலும், நகைச்சுவையாலும் எளிதாக மக்கள் மனதில் இடம்பிடித்தார் இவர்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலையை கண்டு பயப்படாத குக்குகளே இல்லை. அந்த அளவுக்கு சமையல் தெரியாமல் எல்லாரையும் மிரட்டி வந்தார் இவர். தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி சீசன் 2’விலும் கலக்கி வருகிறார் மணிமேகலை.

தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிக தனித்து போட்டியிட முடிவு!!

இந்நிலையில் மணிமேகலைக்கு ஒரு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் இருப்பதே வசதியான வாழ்க்கை என்று பதிவிட்டு, காலில் சுடு நீர் கொட்டிவிட்டதால் இரண்டு வாரங்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டேன் என கூறியுள்ளார் மணிமேகலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here