வறுத்து அரைத்த மட்டன் மசாலா ரெசிபி – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0
Mutton-Curry
Mutton-Curry

மட்டன் என்றாலே உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மட்டனில் எந்த வகையான ரெசிபி செய்தலும் அசத்தலாக இருக்கும். தற்போது இந்த மட்டனை வைத்து வறுத்து அரைத்த மட்டன் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

mutton gravy ingredients
mutton gravy ingredients
  • மட்டன் – 1/2 கி
  • மல்லி – 2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பட்டை கிராம்பு – சிறிது
  • பிரியாணி இலை – சிறிது
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 10
  • வெங்காயம் – 2
  • இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • தயிர்

செய்முறை

முதலில் மட்டனை மஞ்சள்தூள் சேர்ந்து நன்கு கழுவிக்கொள்ளவும். அதன் பின் மிளகு, சீரகம், பட்டை கிராம்பு, பிரியாணி இலை போன்றவற்றை மிதமான சூட்டில் வதக்கி அதனை நன்கு அரைத்து கொள்ளவும். அதன் பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mutton-curry-thumb
mutton-curry-thumb

வெங்காயம் பொன்னிறமானதும் மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி ஓரளவிற்கு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வைக்கவும். 4 விசில் வந்ததும் மட்டனை இறக்கி அதனை தவாவில் மாற்ற வேண்டும். அடுப்பை சிறிதாக வைத்து இந்த மட்டனை வதக்கவும்.

காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா – வைரலாகும் ட்விட்டர் வீடியோ!!

mutton gravy
mutton gravy

அதன் பின் நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்க்கவும். அதன் பின் சிறிது தயிரையும் சேர்த்து வதக்கவும். ஏற்கனவே குக்கரில் மட்டன் நன்கு வெந்திருக்கும். எனவே தற்போது நீர் வற்றும் வரை வதக்கவும். இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here