டெல்லியில் இணைய சேவைகள் முடக்கம் – நாளை நள்ளிரவு வரை நீட்டிப்பு!!

0

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை வரை அதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையசேவை துண்டிப்பு

டெல்லியில் 65 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 26 ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தினர். அந்த பேரணியில் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் டெல்லி தலைமை காவல் அலுவகத்தையும் டெல்லி செங்கோட்டையையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

‘தி பேமிலிமேன் – 2’ வெப்சீரிஸ் ரிலீஸ் தள்ளிவைப்பு – ஏமாற்றத்தில் சம்மு ரசிகர்கள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தலைநகர் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. டெல்லியின் பாதுகாப்பு கருதி பொது அவசர நிலை மற்றும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெல்லியின் குறிப்பிட்ட சில இடங்களில் இணையசேவையானது கடந்த 29 ம் தேதி முதல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அளித்துள்ள அறிக்கையில், ‘டெல்லி எல்லைகளான காஜிப்பூர், சிங்கு மற்றும் டிக்ரி ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 2 ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை இணையசேவைகள் முடக்கம் நீடிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here