ஒரே நாளில் மோடி,ராகுல் தமிழகம் வருகை – பாதுகாப்பு தீவிரம்!!

0

தமிழகத்தில் வரும் மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேசிய கட்சி தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி இருவரும் ஒரே நாளில் தமிழகம் வர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தல்:

தற்போது தமிழகத்தில் வரும் மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு தீவிரமான முறையில் வேலைகளை செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி வேலைகள் குறித்தும் வேலை செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ராகுல் மற்றும் பிரதமர் மோடி சட்டமன்ற தேர்தலின் கட்சி வேலைக்காக தமிழகம் வர உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் ஒரே நாளில் தமிழகம் வருகை தரவுள்ளனர். வரும் 14ம் தேதி மோடி சென்னை வர உள்ளார். இங்கு வந்த அவர் மெட்ரோ விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ பாதையை திறந்து வைக்கவுள்ளார். மேலும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும் பலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.

‘தளபதி 65க்கு அடி போடுறாங்கன்னு நெனைக்கிறேன்’ – வனிதாவை பங்கமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

இவரை போல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 14ம் தேதி சென்னை வரவுள்ளார். இவர் இங்கு வந்து 14,15 மற்றும் 16ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட பிரச்சார வேலைகளை தொடங்க உள்ளார். நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பரப்புரை ஆற்ற உள்ளார். மேலும் 6 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 120 கிலோமீட்டர் தொலைவு வரை பரப்புரை ஆற்ற உள்ளார். தற்போது இரு பெரும் தலைவர்கள் தமிழகத்திற்கு ஒரே நாளில் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமான முறையில் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here