விஷாலின் ‘சக்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ திரைப்படம் பிப்ரவரி 12ம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது பிப்ரவரி 19க்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19 ல் ‘சக்ரா’

அறிமுக இயக்குனர் எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. ஆக்சன் த்ரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் விஷாலுடன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#INDvsENG டெஸ்ட் தொடர் – சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சக்ரா’. கொரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததை ஒட்டி மீண்டுமாக திரையரங்குகள் திறக்கப்பட்டது. படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மே 1 ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா தொற்றால் இப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 12 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதம் 19 ம் தேதி என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here