கால் பந்தாட்ட வீரர் மெஸ்ஸி ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் – ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கை அறிவிப்பு!!

0

கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரரான மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக கடந்த 4 ஆண்டுக்காக சுமார் ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ஸ்பெயின் நாட்டின் ஒரு பத்திரிகை அறிவித்துள்ளது.

மெஸ்ஸி:

நாட்டில் கிரிக்கெட்டிற்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்களோ அதேபோல் கால் பந்தாட்டத்திற்கும் ரசிகர்கள் உள்ளார்கள். கிரிக்கெட்டை போலவே கால்பந்து தொடருக்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். கால்பந்து உலகின் ஜாம்பவானாக கருதப்படுபவர் தான் மெஸ்ஸி. இவர் கால்பந்து போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். குறிப்பாக 30க்கும் மேற்பட்ட பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் பார்சிலோனா அணியின் முன்னேற்றம் இவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இல்லை. இதனை பேட்டி ஒன்றில் வருத்தமாக தெரிவித்தார் மெஸ்ஸி. மேலும் இதன் காரணமாக அவர் பார்சிலோனா அணியில் இருந்து விலக முடிவு செய்தார். ஆனால் பார்சிலோனா கிளப்பில் இருந்து வேற கிளப்பிற்கு மாறுவதற்கு இவருக்கு பல சட்ட சிக்கல்கள் இருந்தது. இதனால் அவரால் மாற முடியவில்லை. தற்போது பார்சிலோனா அணி இவரை ஒப்பந்தம் செய்த பணத்தொகை குறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது.

‘தி பேமிலிமேன் – 2’ வெப்சீரிஸ் ரிலீஸ் தள்ளிவைப்பு – ஏமாற்றத்தில் சம்மு ரசிகர்கள்!!

இதனை ஸ்பெயின் நாட்டில் உள்ள ஓர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி கடந்த 2017ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு இவர் சுமார் ரூ.4,904 கோடி ரூபாய்க்கு பார்சிலோனா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் விளையாட்டு வீரர்களின் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற பெருமையை அடைந்தார். மேலும் ஒரு சீசனுக்கு இவரது சம்பளம் ரூ.1,217 கோடி ரூபாய் ஆகும். ஆனால் ஸ்பெயின் நாட்டு வரி விதிப்படி இவரது சம்பளத்தில் பாதி வரியாக செலுத்த வேண்டும். ஒப்பந்த தொகை படி மெஸ்ஸி ஏற்கனவே ரூ.4,500 கோடியை பெற்றுள்ளார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here