‘தி பேமிலிமேன் – 2’ வெப்சீரிஸ் ரிலீஸ் தள்ளிவைப்பு – ஏமாற்றத்தில் சம்மு ரசிகர்கள்!!

0

நடிகை சமந்தா நடித்துள்ள ஹிந்தி வெப் தொடர் ‘தி பேமிலிமேன் – 2’. இந்த தொடரின் ஒளிபரப்பு தேதி பெப்ரவரி 12 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதியில் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி பேமிலிமேன் 2

தமிழ் நடிகையான சமந்தா 2010 ஆண்டு வெளிவந்த கவுதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். பின்பு ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கொரோனா ஊரடங்கு முடிந்து படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழ் திரைப்படத்தில் சமந்தா நடித்துள்ளதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை – வானிலை மையம் தகவல்!!

தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா முதன் முதலாக ஹிந்தியில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் ‘தி பேமிலிமேன் 2 ‘. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் சமந்தா. இவருடன் இப்படத்தில் நடிகை தேவதர்ஷினி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019 ல் அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து இப்படத்திற்கான இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி பிப்ரவரி 12 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இப்படம் குறிக்கப்பட்ட தேதி அன்று வெளியாகப்போவதில்லை என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அமேசானில் வெளியான ‘மிப்சாபூர்’ மற்றும் ‘தந்தவ்’ ஆகிய வெப் தொடர்கள் மத உணர்வை புண்படுத்தும் நோக்கிலிருப்பதாக கூறி அமேசான் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து பேமிலி மேன் படத்திற்கான மறுஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தை ஆய்வு செய்த பின்னரே படம் அமேசானில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமந்தாவின் இணையதொடரை காணவேண்டும் என்று ஆசையிலிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here