ஆதார் அட்டைதாரர்கள் ஜூன் 14 க்குள் இத கண்டிப்பா செஞ்சுருங்க.., இல்லனா நீங்க தா வருத்தப்படுவீங்க!!

0
மத்திய மற்றும் மாநில அரசானது, பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதை நாம் அறிவோம். இந்த நலத்திட்டங்களை மக்கள் முழுமையாக பெற வேண்டுமானால், இந்திய குடிமகன் என்பதற்கான அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் கார்டை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்வதும் அவசியமான ஒன்றாகும்.
இந்த நிலையில் ஆதார் அட்டையை வரும் ஜூன் 14 க்குள் புதுப்பிக்காவிட்டால் ரத்து செய்யப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வந்தன. தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் UIDAD ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அப்டேட் செய்யாவிட்டால் ஆதார் அட்டைகள் எதுவும் ரத்து செய்யப்படாது, ஆதார் அட்டையில் கட்டணமின்றி திருத்தங்கள் செய்து கொள்ள வரும் ஜூன் 14ஆம் தேதி வரை அவகாசம், அதற்கு மேல் திருத்தங்கள் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here