சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்., தீவிர சோதனையில் போலீசார்.. முழு விவரம் உள்ளே!!

0
சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்., தீவிர சோதனையில் போலீசார்.. முழு விவரம் உள்ளே!!
இயல்பாகவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதை ஆகிவிட்டது . அந்த வகையில் இன்று சென்னை ஆர்.ஏ புரத்தில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இ – மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மிரட்டலை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மற்றும் டெல்லியில் உள்ள ஏராளமான பள்ளிகளுக்கு இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here