ஐசிசி சார்பாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடர், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் 2 ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கு பெற்றுள்ளன. இதில், ஒரு அணி மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோத உள்ளது. இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/wc-33-1.jpg)
இந்த T20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சரியாக 9 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரானது வரும் மே 26ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நாளை (மே 25) டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.