‘தளபதி 65க்கு அடி போடுறாங்கன்னு நெனைக்கிறேன்’ – வனிதாவை பங்கமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

சமூக வலைத்தளங்கலேயே கலக்கிக்கொண்டிருக்கும் வனிதா விஜயக்குமார் தற்போது தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார். தற்போது விஜய் உடன் அவர் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வனிதா

தமிழ் சினிமாவின் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதாவிற்கு இந்த வருடம் முழுக்க பல பிரச்சனை தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவரின் பயணம் தற்போது வரை தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. எல்லா விஷயத்திலும் கரடுமுரடாகவே பேசும் வனிதாவயோ தற்போது வரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே இரண்டு கல்யாணம் செய்த வனிதா லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சியாகியது. அதிலும் வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு இப்படி திருமணம் செய்துகொண்டாரே என திட்ட ஆரம்பித்தனர்.

எஸ்.ஜே சூர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!!

இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. பின்பு பீட்டர் பாலையும் விட்டு பிரிந்த வனிதா பல கேலி கிண்டலுக்கு ஆளானார். ஆனால் அதனை வனிதா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து தனது வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கு நகர ஆரம்பித்தார்.

யூடுப் சேனல், பிக் பாஸ் ரிவியூ, குக்கிங் சேனல் என தனது கேரியரில் கவனம் செலுத்த விட்டார். இப்பொழுது பீட்டர் பால் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று யாருக்குமே தெரியாது. மேலும் வனிதா ஒரே படத்தில் நடித்து விட்டு தானும் ஒரு செலிபிரிட்டி என்று பீத்திக்கொண்டு தான் உள்ளார்.

எங்கே சென்றாலும் தான் ஒரு செலிபிரிட்டி என்பதை பதிவு செய்வதை விட்டதே இல்லை வனிதா. தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வரும் வனிதா தான் முதன்முதலில் விஜய் உடன் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். ஒரே படத்தில் நடித்து விட்டு இந்த சீன் தேவையா?? என்று கமன்ட் செக்சனில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here