எஸ்.ஜே சூர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!!

0

நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய படம்

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘மான்ஸ்டர்’. வசூல் ரீதியான வெற்றி பெற்ற இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருந்தார். இதில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் ‘பொம்மை’ என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.

தனது கணவருடன் ஜோடியாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரினா – இணையத்தில் வைரல்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நடிகர் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்திலும் சிம்புவுக்கு வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே சூர்யா. இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியிருக்கிறது. சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்தரிக்காய்’ என்ற படத்தை இயக்கின வெங்கட் ராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படம் ‘கடமையை செய்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here