சரக்கு வாகனம் ஏற்றி எஸ்ஐ கொலை – 50 லட்சம் நிதியுதவி & அரசு வேலை!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

0

தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வார் பாலு இன்று அதிகாலை சரக்கு வேனில் விபத்துக்குள்ளாகி பரிதமாக உயிர் இழந்தார். தற்போது இவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சமும் மற்றும் இவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பாலு பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு காவல் நிலையத்திற்கு ஏரல் கடை வீதியில் ஓர் உணவகத்தில் சிலர் மது போதையில் தகராறு செய்வதாக புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இரவு வேளையில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன் சுப்பையா சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகராறு செய்த முருகவேல் என்பவரை போலீசார் எச்சரித்து அனுப்பினார். அதன் பிறகு உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் சுப்பையா இரவு நேர ரோந்து பணியில் இருசக்கர வாகனம் மூலம் ஈடுபட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது ஆத்திரமடைந்த முருகவேல் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சரக்கு வாகனம் மூலம் இடித்துவிட்டு சென்றுள்ளார். இந்த விபத்தில் பாலு பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு போகும் வேளையில் பாலு பரிதாபமாக உயிர் இழந்தார். மற்றொரு காவலர் சுப்பையா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் அறிவிப்பு:

தற்போது இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இந்த சம்பவத்தை நான் அறிந்த பின்பு மிகுந்த வேதனை அடைந்தேன். பாலுவின் குடும்பத்திற்கு இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாலுவின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை சிறப்பினமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

எஸ்.ஜே சூர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!!

மேலும் பாலுவின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்பட்டு. மேலும் சுப்பையாவின் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற வைப்பதற்கு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here