காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் அர்ச்சனா.. நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

0
காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக் பாஸ் அர்ச்சனா.. நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின்  மனதையும் கவர்ந்தவர் தான் VJ அர்ச்சனா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 7  நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் WILD CARD என்ட்ரியில் வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் மூலம் இறுதி வரை சென்ற இவர் டைட்டிலை வென்று அசத்தினார். ரசிகர்களும் அதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்லலாம்.  இந்த நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் என்பருடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் உலா வந்தன.

தற்போது அந்த விமர்சனத்திற்கு நடிகை அர்ச்சனா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, நானும் அருணம் காதலிக்கவில்லை, இருவரும் நண்பர்கள் தான். மற்ற அனைத்துமே மக்களின் கற்பனை எனக்கூறி காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here