நடராஜனுக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சரத்குமார் மற்றும் ராதிகா – வைரலாகும் வீடியோ!!

0

இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் மற்றும் தமிழக வீரருமான நடராஜனுக்கு சமக கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நடராஜன்:

தமிழக வீரரான நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அவர் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக ஆஸ்திரேலிய சுற்றுக்கு தேர்வானார். அந்த வாய்ப்பை நன்றாக நடராஜன் பயன்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியினரை தனது பௌலிங் மூலம் மிரட்டினார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மொத்தமாக 11 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் நடராஜன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. ஆஸ்திரேலியா சுற்று முடிந்து தனது தாயகம் திரும்பிய நடராஜனுக்கு அவரது ஊர் மக்கள் மிக சிறப்பான வரவேற்பை அளித்தனர். மேலும் தனது ஊருக்கு திரும்பிய நடராஜன் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயமாக வெற்றி உள்ளது. மேலும் என்னைப்போல் உள்ளவர்கள் இனி இந்தியா கிரிக்கெட்டிற்கு வர விரும்பலாம் என்று இளைஞர்களை உற்சாக படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

வாழ்த்துக்களை தெரிவித்த சரத்குமார், ராதிகா:

தற்போது சமக கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நடராஜனுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். மேலும் அவரது மனைவி ராதிகாவும் பேசியுள்ளார். இவர்கள் இருவரும் நடராஜனுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சரத்குமார் கூறியதாவது, நான் நிறைய இடத்தில் உங்களை பற்றி பேசியுள்ளேன். மேலும் செய்தியார்களிடம் கூட முதலமைச்சர் யார் வேணும்னாலும் ஆகலாம், அனால் திறமை இருந்தால் மட்டுமே நடராஜனை போல் முன்னேற முடியும் என்று கூறினேன். நீங்கள் சொந்த ஊருக்கு வந்த போது நான் வாழப்பாடி பக்கத்தில் தான் இருந்தேன்.

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

உங்களை பார்க்க வரலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் பழனி போயிருந்ததாக சொன்னார்கள். அதான் வரமுடியவில்லை. சென்னை வந்தால் கண்டிப்பாக வீட்டிற்கு வாருங்கள், நாங்களும் உங்களை பார்க்க வருகிறோம் என்று உணர்ச்சி போங்க சரத்குமார் பேசியுள்ளார். இவரைப்போல் ராதிகாவும் பேசியுள்ளார். தற்போது இவர்கள் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here