ஓடிடியில் தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ ரிலீஸ் ஆகுமா?? தயாரிப்பாளர் மவுனம்!!

0

நடிகர் தனுஷ் நடித்து திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தின் வெளியீடு ஓடிடி தளத்தில் இருக்கும் என வெளியான செய்திகளை தயாரிப்பாளர் மறுத்துள்ளனர்.

ஜகமே தந்திரம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரைட் ஆக மாறியிருக்கிறது. இப்படத்தின் வெளியீடு கடந்த ஆண்டு மே மாதம் 1 ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கில் படம் ஏதும் வெளிவராத நிலையில் தற்போது திரையரங்குகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடி யில் வெளியாகவுள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கால் பந்தாட்ட வீரர் மெஸ்ஸி ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் – ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கை அறிவிப்பு!!

இந்த செய்திகள் பற்றி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும் ஒரு முன்னணி இணைய நிறுவனத்திற்கு 50 கோடிக்கு இப்படம் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பின்பு ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த பட வெளியீடு செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனினும் இந்த படத்திற்கான எந்த அறிவிப்பும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்துள்ள மற்றோரு படம் ‘ஏலே’. இந்த படம் பிப்ரவரி 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதன் பிறகே ‘ஜகமே தந்திரம்’ படத்தின் அறிவிப்புகள் இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டால் ‘ஏலே’ படத்தின் வெளியீட்டிற்கு திரையரங்கு உரிமையாளார்களிடமிருந்து சிக்கல்கள் வரும் என கருதுவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here