இந்தியாவில் 31 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,897 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 72 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,332 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,007 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். 7,696 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,629 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 400 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாநில வாரியாக பாதிப்பு விபரம்:

  1. மஹாராஷ்டிரா – 9,318 பேர்
  2. குஜராத் – 3774 பேர்
  3. டில்லி – 3,314 பேர்
  4. மத்தியப்பிரதேசம் – 2,387 பேர்
  5. ராஜஸ்தான் – 2,364 பேர்
  6. தமிழகம் – 2,058 பேர்
  7. உத்திரப்பிரதேசம் – 2,053 பேர்
  8. ஆந்திரா – 1,259 பேர்
  9. தெலுங்கானா – 1,004 பேர்
  10. மேற்கு வங்கம் – 725 பேர்
  11. காஷ்மீர் – 565 பேர்
  12. கர்நாடகா – 523 பேர்
  13. கேரளா – 485 பேர்
  14. பீஹார் – 366 பேர்
  15. பஞ்சாப் – 322 பேர்
  16. ஹரியானா – 310 பேர்
  17. ஒடிசா – 118 பேர்
  18. ஜார்க்கண்ட் – 103 பேர்
  19. சண்டிகர் – 56 பேர்
  20. உத்தரகாண்ட் – 54 பேர்
  21. ஹிமாச்சல பிரதேசம் – 40 பேர்
  22. அசாம் – 38 பேர்
  23. சத்தீஸ்கர் – 38 பேர்
  24. அந்தமான் – 33 பேர்
  25. லடாக் – 22 பேர்
  26. மேகாலயா- 12 பேர்
  27. புதுச்சேரி- 09 பேர்
  28. கோவா- 07 பேர்
  29. திரிபுரா- 02 பேர்
  30. மணிப்பூர் – 02 பேர்
  31. அருணாச்சல பிரதேசம் – 01 பேர்
  32. மிசோரம் – 01 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here