தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 121 பேருக்கு தொற்று உறுதி..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2058 பேர்
  • இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை – 25 பேர் (1.21%)
  • வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 30,692 பேர்
  • அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை – 47 பேர்

தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1128 (54.80%) ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கும், செங்கல்பட்டில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும், நாமக்கல்லில் 2 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 32 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 673 பேர்
  • கோவை – 141 பேர்
  • திருப்பூர் – 112 பேர்
  • திண்டுக்கல் – 80 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • மதுரை – 79 பேர்
  • நெல்லை – 63 பேர்
  • செங்கல்பட்டு – 70 பேர்
  • நாமக்கல் – 59 பேர்
  • திருச்சி – 51 பேர்
  • திருவள்ளூர் – 53 பேர்
  • தேனி – 43 பேர்
  • நாகை – 44 பேர்
  • கரூர் – 42 பேர்
  • ராணிப்பேட்டை – 39 பேர்
  • கள்ளக்குறிச்சி – 9 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here