#INDvsENG 2வது டெஸ்ட் – அஸ்வின், கோஹ்லி அரைசதம்! வலுபெறும் இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் விராட் மற்றும் அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 329 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அதிரடி ஆட்டகாரர் ரோஹித் சர்மா 161 ரன்களை குவித்தார். அதன்பின்பு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் இன்னிங்சில் இந்திய அணியின் அஸ்வின் மிக சிறப்பாக பந்து வீசினார். இவரது அபாரப் பந்து வீச்சால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்களை சாய்த்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 195 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை துவக்கியது.

வாட்ஸ் ஆப் புதிய கொள்கை – மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

கில் 14, முதல் இன்னிங்சில் சதம் அடித்த ரோஹித் 26, புஜாரா 7, பாண்ட் 8, ரஹானே 10 மற்றும் அக்சர் 7 ஏமாற்றி பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டு விளையாடி வந்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 62 ரன்கள் எடுத்த நிலையில் கோஹ்லி ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் அஸ்வின் மற்றும் இஷாந்த் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 221/8

அஸ்வின்- 68*
இஷாந்த்- 0*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here