மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – மக்கள் அதிர்ச்சி!!

0

குஜராத் முதல்வர் விஜய் ருபானி பிரச்சார மேடையில் உரை நிகழ்த்தி கொண்டு இருக்கும் போது மயங்கி விழுந்துள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சிகரமான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேடையிலேயே மயக்கம்

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கு அங்கு உள்ள அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அந்த மாநிலத்தின் முதல்வர் விஜய் ருபானி குஜராத்தின் வதோதரா என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் தேர்தல் நெருங்கும் காரணத்தை கொண்டு பிரச்சார உரை நிகழ்த்தினார். அதே போல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு விரைவில் திருமணம் – அட மாப்பிள்ளை இவர் தானா?!

அப்போது திடீர் என்று மேடையில் பேசி கொண்டு இருக்கும் போது மயங்கி விழுந்து விட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. முதல்வரின் பாதுகாவலர்கள் உடனடியாக முதல்வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தனர். இதனை அடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று கண்டறிய பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அந்த மாநிலத்தின் துணை முதல்வர் நிதின் படேல் கூறுகையில், “அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முதல்வரின் உடல் நலன் குறித்து பிரதமர் தொலைபேசி வாயிலாக விசாரித்தார்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here