#IND vs AUS இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் – 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தீவிரம்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையில் தற்போது டெஸ்ட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது . 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது .இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி தோல்வியை சந்தித்துள்ளது .இதுவே ,மூன்று முறை இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியுற்றதாகும் .

வீரர்கள் மாற்றம்:

முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் கூட சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தாத காரணத்தால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதலாவது டெஸ்ட் போட்டியினை கேப்டனாக வழிநடத்திய விராட் கோஹ்லி தனது மனைவிக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் தாயகம் திரும்பவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்திய அணியை கேப்டனாக ரஹானே வழிநடத்தி செல்லவுள்ளார். கடந்த 2017 -ம் ஆண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#IND vs AUS மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும்!!

இந்திய – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தொடக்கவீரர்களாக களமிறங்கவுள்ளனர் . சஹாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஆடவுள்ளார் .அதை போல் பௌலிங்கில் ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆடவுள்ளார் .

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா, கே. எல் ராகுல், புஜாரா, ரஹானே, சுப்மான் கில், பண்ட், ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here