#IND vs AUS மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அறிவிப்பு!!

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும். அதற்கு தேவையான பாதுகாப்பு செயல்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு செய்து வருகின்றது என்று அறிவித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து முடிந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக செயல்பட்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. 3-வது போட்டி சிட்னியிலும் மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. ஆனால் தற்போது மூன்றாவது போட்டி நடைபெறுவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் 2வது அலை:

தற்போது சிட்னியில் கொரோனாவின் 2வது அலை ஆரம்பித்துள்ளது. சில நாட்களாக அந்த நாட்டில் உள்ள மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பாதிப்பு எண்ணிக்கை கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மூன்றாவது போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதை பற்றிய அறிவிப்பு ஒன்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது.

10 நிமிடங்களில் பான் கார்டு பெற வேண்டுமா??

முன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக சிட்னி எல்லை மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கு வைத்து போட்டி நடத்தினாலும் வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும். இதனால் 4 வது டெஸ்ட் போட்டி பாதிக்கபடும். எனவே 3 வது டெஸ்ட் போட்டியை மெல்போர்ன் அல்லது பிரிஸ்பேனில் வைத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லையெனில் முதலாவது போட்டி நடைபெற்ற அடிலெய்டில் வைத்து கூட நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிட்னியில் போட்டியை நடத்துவதற்காக அணைத்து பாதுகாப்பு வேலைகளும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு மேற்கொண்டு வருகிறது என்று கூறுகிறது. மூன்றாவது போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் எந்த மைதானம் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here